கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு – அதிமுக தரப்பு!

அதிமுகவின் பொதுக்குழுத் தீர்மானங்கள் செல்லும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள். அதிமுகவின் சின்னமான இரட்டை இலையையும், கொடியையும் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்தினாலோ, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பயன்படுத்தினாலோ அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பெருமக்கள் கூறியுள்ளார்கள். பொதுச்செயலாளர் எனும் மாபெரும் பதவிக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் அதனை சட்டரீதியாகவே அணுகி மாபெரும் வெற்றியை கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பெற்றுள்ளார்.

Exit mobile version