அய்யோ!அம்மா! என கதரும் அளவிற்கு வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது.வெயிலின் தாக்கத்திலிருந்து தப்புவதற்கு இங்கே ஒருவர் வித்தியாசமான முயற்சி எடுத்துள்ளார்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சீஜல் ஷா என்னும் பெண்மணி தனது காரின் மேல் மாட்டு சாணத்தை பூசியுள்ளார்.
வெயிலிலிருந்து மக்கள் தப்பிக்க பல்வேறு உபாயங்களை நாடுகின்றனர்.அருந்துவதற்கு இளநீர்,மோர் மற்றும் குளிர்பானங்களும்,உறங்கும் போது ஏ.சி-யையும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் ஏ.சியில் உறங்குவதும் உடல்நிலைக்கு தீங்கு விளைவிக்கும்.எனவே இயற்கை முறையில் வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது என யோசித்து மாட்டு சானத்தை பெயிண்ட் போல் காரின் மீது மொழுவியுள்ளார்.இதன் மூலம் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலிருந்து தனது காரினை பாதுகாத்துக்கொள்ள முடிகிறது எனவும் சீஜல் ஷா தெரிவித்துள்ளார்.
மாட்டு சாணத்தை மிதித்தாலே அருவருப்பாக கருதும் சிலருக்கு, இப்பெண்ணின் செயல் நெற்றி அடியாக இருக்கும்.