மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் – உயர் நீதிமன்றம்

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11-வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர் மரணம் அடைந்ததையடுத்து 12-வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டார். நாளை அவர் பட்டாபிஷேகம் செய்ய உள்ள நிலையில் அவரது நியமனத்தை எதிர்த்து வெங்கடவரதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன், ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் புதிய பீடாதிபதியாக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version