குரூப்-1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில், அரசு பணியாளர் தேர்வாணைய துணைச் செயலாளர் தாரா பாய், பதில் மனு தாக்கல் செய்தார். அதில் மாதிரி விடைத்தாளில் இருந்த 96 கேள்விகளுக்கு தவறான பதில் அளித்துள்ளதாக, 4 ஆயிரத்து 390 பேர் மனு அளித்ததாகவும், அவற்றை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அரசு தேர்வுகளில் இது போல் இயந்திரத்தனமாக செயல்படக்கூடாது என குறிப்பிட்டிருந்த உயர்நீதி மன்றம், இந்த வழக்கினை வரும் ஜீன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.