தமிழகத்தில் இன்று மேலும் இரண்டாயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 52 பேர் உள்பட இன்று ஒரே நாளில் இரண்டாயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 579 பேர் ஆண்களும், 953 பெண்களும் அடங்குவர். சென்னையில் இன்று ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 41 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதேபோன்று கடலூரில் 102 பேருக்கும், மதுரையில் 69 பேருக்கும் வேலூரில் 87 பேருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து இன்று மட்டும் ஆயிரத்து 438 பேர் மீண்டுள்ளனர். குணமடைந்தோர் சதவிகிதம் 55 சதவிகிதத்தைக் கடந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் 25 ஆயிரத்து 863 பேர் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 31 ஆயிரத்து 401 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post