ஜாக்கிரதை.. ஸ்மார்ட் போன்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்

சீனாவில் பரவிய கொரானா என்ற கொடிய வைரஸிற்கு தற்போது வரை சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதனால் சீனாவில் நாளுக்கு நாள் பலியானவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை கொரானா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக இருந்தது. தற்போது 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.

மனிதர்களை மட்டும் தான்  இந்த வைரஸ் தாக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களையும் இந்த வைரஸ் எளிதில் தாக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, கஸ்பெர்ஸ்கை ஆண்டிவைரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், போன் மற்றும் கம்யூட்டர்களில் இருக்கும், பைல்களில் கொரோனா வைரஸை கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த வைரஸ் pdf மற்றும் document file-களை தாக்கி இருப்பதாக கூறியுள்ளனர்

 மேலும், இந்த கொரோனா வைரசானது பல்வேறு போலியான பைல்களில் இருந்து பரவுகின்றது என்பதும் தெரியவந்துள்ளது.

Exit mobile version