கொரோனா பரிசோதனையில் குளறுபடி செய்ததால், பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறியதாக மெட் ஆல் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. மே 19, 20 ஆகிய தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்கத்தாவில் கொரோனா பாசிடிவ் இருந்தவர்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்தவராக அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக புகார் எழுந்ததையடுத்து மெட் ஆல் நிறுவனத்தின் மீது தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post