இந்தியாவில் ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 96 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. .

கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் ஆயிரத்து 209 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது. 35 லட்சத்து 42 ஆயிரத்து 664 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இதுவரை 9 லட்சத்து 90 ஆயிரத்து 795 பேருக்கும், ஆந்திராவில் 5 லட்சத்து 37 ஆயிரத்து 687 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 947 பேரும், உத்தர பிரதேசத்தில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 29 பேரும், டெல்லியில் 2 லட்சத்து ஐந்தாயிரத்து 482 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மேற்குவங்கம், பீகார், தெலங்கானா உள்பட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

Exit mobile version