இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 லட்சத்து 34 ஆயிரத்து 621 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 22 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 85 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 921 பேருக்கும், குஜராத்தில் 40 ஆயிரத்து 941 பேரும், கர்நாடகத்தில் 36 ஆயிரத்து 216 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 35 ஆயிரத்து 92 பேரும், தெலங்கானாவில் 33 ஆயிரத்து 402 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், ஆந்திரா, மேற்குவங்கம், போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
Discussion about this post