ஜெயிச்சிட்டோம் மாறா – 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்ற அர்ஜென்டினா(Argentina)!!

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது அர்ஜென்டினா, இதுவரை 29 முறை கோபா கோப்பை பைனலில் விளையாடி 15 முறை கோப்பையை வென்றுள்ளது அர்ஜென்டினா.

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த தொடரில் வெற்றியாளர்  இறுதிசுற்றுக்கு தகுதிபெற்று ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் களமிறங்கின.ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா விளையாட்டரங்கத்தில் நேற்று போட்டி நடைபெற்றது.

 

 

முதல் இருபது நிமிடம் இரு அணியும் கோல் எடுக்காமல் சமனிலே இருந்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் வீரர் ஏஞ்சல் டி மரியா முதல் கோல் போட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.  பிரேசில் பக்கமிருந்து ஒரு கோல் கூட வராததால் ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற எண்ணிக்கையில் முன்னிலை வகித்தது.

அர்ஜென்டினா அணியின் பாரட்டுதலுக்குரிய தடுப்பாட்டம் இரண்டாம் பாதியில் பிரேசில் அணியினரின் முயற்சிகளை தகர்த்தது.இறுதி  நேர ஆட்டமுடிவில்  இருஅணியிடமிருந்து கோல் ஏதும் அடிக்கவில்லை. 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி  1993ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த நிலையில்  28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோப்பையைப் பெற்று பிரேசில் நாட்டில் தனது வெற்றியை பதித்துள்ளது. 

 

செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண

⬇⬇⬇⬇⬇

https://fb.watch/6GjvkvHx24/

 

Exit mobile version