”கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்” என சொல்வார்கள். ஆனால் 100 கோடி கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாமல் தவித்து வருகிறார் கூலித்தொழிலாளி ஒருவர். என்ன நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்.
வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கூலித்தொழிலாளி ஒருவர் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆகி தனது கிராமத்தினரையே ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஒரே இரவில் பலகோடிகளுக்கு அதிபதி ஆனாலும் அந்த கோடிகளினால் மிகுந்த மன வேதனைக்கும் உள்ளாகி இருக்கிறார் கூலித்தொழிலாளி.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். கூலித்தொழிலாளியான இவரது வங்கி கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்த நிலையில், ஒருநாள் திடீரென அவரது வீட்டிற்கு வந்த சைபர் செல் துறையினர் அவரது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதாகவும், அது எப்படி கிடைத்தது என அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அடேங்கப்பா 100 கோடியா? அதுக்கு எவ்ளொ சைபர் என்று கூட தெரியாதே என்று திக்குமுக்காடிப்போய் உள்ளார்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று நினைத்து வருந்திக்கொண்டிருந்தாலும், தான் சம்பாதிக்காத பணம் தன் கைக்கு வராது என்ற உண்மையை புரிந்து கொள்ள சில காலம் பிடிக்கும்தானே!
– உமேஷ் அங்கமுத்து, செய்தியாளர்.