தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து மோதல் எழுந்திருப்பதாக கூறப்படுவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து மோதல் எழுந்திருப்பதாக வரும் சர்ச்சை தேவையற்றது என்று கூறினார். எந்த ஒரு விவகாரத்திலும் மூன்று தேர்தல் ஆணையர்களின் முடிவும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும் தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம்தான் அவர் கூறியுள்ளார். தேர்தல் நடத்தை விதி மீறல்கள் புகார் தொடர்பாக தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்று ஆணையர் அசோக் லவாசா தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post