கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து மூன்றாவது நாளாக அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைப் பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் அணையின் நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.
408 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரானது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Discussion about this post