முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த பணிகள் மேற்கொள்வது, நடைமுறைபடுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.