கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை அடங்கிய மனுவிற்கு தமிழக முதல்வர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கட்டுமான தொழிலாளர்கள் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று தற்போது எழுந்துள்ளது.
சென்னை தி நகரில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன்பு தமிழ் நாடு கட்டுமான தொழிலாளர்கள் அவர்களது மாத ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, விபத்துக்கான காப்பீட்டு தொகை முதலியவற்றினை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான தொழிலாளர்களின் மாத ஓய்வு ஊதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட எனவும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கியதோடு ஓய்வூதியத்தை பிரதி மாதம் பத்தாம் தேதிக்குள் வழங்கிட வேண்டும், விபத்து மரணம் மற்றும் இயற்கை மரணம் நிகழும் நிகழ்வுகளில் வாரியத்தால் வழங்கப்படும் உதவி தொகை 30 நாட்களுக்குள் தொழிலாளியை இழந்த குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தீபாவளி பண்டிகை கால போனஸ் தொகை ரூபாய் 5 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்கு முன்பே வழங்கிட வேண்டும் எனவும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
35, 36 கட்டுமான வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவினை அரசாணையாக வெளியிட வேண்டும். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டமான தற்போது நடைபெற்று வருகிறது. கட்டுமான துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் பணமானது இருந்து வருகிறது இது அரசின் உடைய பணம் இல்லை, இது கட்டுமானர்களது பணம். அந்த பணத்தினை கொடுப்பதற்கு கூட அரசு முயற்சி செய்ய வில்லை.
எங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் வருகின்ற செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். எங்களுடைய போராட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரைக்கு மனு அனுப்பிவிருக்கிறோம் மற்றும் தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பி இருக்கிறோம் இருப்பினும் இதுவரை எந்தவித பதிலையும் எங்களுக்கு கிடைக்கவில்லை.