சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, 10 மாதங்களாகியும், இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு ஒன்று தற்போது எழுந்துள்ளது. நீதித்துறைக்கு அரசு ஒதுக்கிய, 4.26 ஏக்கர் நிலத்தில் உள்ள விடுதியை இன்னும் காலி செய்யாததால் கட்டுமான பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், சிவில் குற்றவியல் நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், தொழிலாளர் நல நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் செயல்படுகின்றன.
இடவசதி தேவை..!
சென்னை கலெக்டர் அலுவலகமான சிங்காரவேலர் மாளிகை மற்றும் எழும்பூரிலும், சிவில் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. இவ்வாறு, சென்னையில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட, சிவில் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. உயர் நீதிமன்ற வளாகத்திலேயே, இந்த கீழமை நீதிமன்றங்கள் பல இயங்குவதால், தினசரி அங்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது. போதிய இட வசதி இல்லாமல், நெருக்கடி ஏற்படுகிறது. ஊழியர்கள், வழக்காடிகள் வரும் வாகனங்களை நிறுத்தவும், அதிக இடவசதி தேவை.எனவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்கள், எழும்பூர் மற்றும் சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள சிவில் நீதிமன்றங்கள் அனைத்தையும், ஒரே வளாகத்திற்குள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டும் திட்டம்!
பிராட்வே பஸ் நிலையம் அருகே, 7.60 ஏக்கர் நிலத்தை அரசிடம் பெற்று,அதில் 11 அடுக்கில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டும் திட்டம் உருவானது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரமணா பங்கேற்ற நிகழ்ச்சியில் பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள, 4.24 ஏக்கர் நிலத்தை, நீதித்துறையிடம் ஒப்படைப்பதற்கான அரசாணையை, அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியிடம், விடியா முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த 4.24 ஏக்கருடன் அருகேயுள்ள 3.36 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து, 7.60 ஏக்கரில் கட்டடம் கட்ட முடிவானது. நவீன முறையில் கட்டப்பட உள்ள இந்த கட்டடத்துக்கு, முதற்கட்டமாக 300 கோடி ரூபாய்க்கு, தமிழக அரசு நிர்வாக ஒப்புதல்ல் வழங்கியது.
பாதிப்புக்குள்ளாகும் மருத்துவ மாணவர் விடுதி..!
கடந்த 2022 செப்டம்பரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆனாலும், இன்னும் கட்டுமானப் பணிகள் துவக்கப்படவில்லை. இதற்கு காரணம் அரசு வழங்கிய 4.24 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள மருத்துவ மாணவர் விடுதி தான். இந்த விடுதியை காலி செய்தால் தான் கட்டுமான பணிகளையும் துவங்க முடியும். விடுதியை காலி செய்யும்படி வற்புறுத்தக்கூடாது என மருத்துவ மாணவர்கள் தரப்பில் அரசிடம் கோரப்ப்ட்டு உள்ளது. இதனை திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.பணிகள் துவங்க ஏதுவாக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கும்படி, உயர்நீதிமன்றத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அரசு இந்த விஷயத்தில் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கறிஞர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தந்தையைத் தட்டிக் கேட்பாரா வாரிசு?
ஒரு திட்டத்திற்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி, அதை துவங்குவதற்கு நீண்ட தாமதம் ஏற்படும்போது, திட்டச் செலவுகளும் அதிகருக்கும், 160 நீதிமன்றங்கள் இயங்கும் வகையில் அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமான முறையில் இந்த கட்டடம் கட்டப்பட வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை என்று வாரிசு அமைச்சர் உதயநிதி செங்கலைத் தூக்கிக்கொண்டு பிரச்சாரம் செய்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அய்யா உதயநிதியே உங்கள் தந்தை அடிக்கல் நாட்டிய இந்த கட்டடம் இன்னும் துவங்கபடாமலேயே இருக்கிறது. இதற்கு ஒரு வழிபார்த்து விடுங்கள் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்து வருகின்றனர். மேலும் மருத்துவ மாணவர் விடுதி பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கிறது. அவர்களின் எதிர்கால இடவசதிக்கு இந்த விடியா திமுக அரசு என்ன செய்யப் போகிறது என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.