தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

தேர்தல் தோல்வி குறித்து ஆராய, டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் துவங்கியது.

17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 90 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதில் காங்கிரஸ் 52 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே கைப்பற்றியது. இந்நிலையில் இத்தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று, உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு 100 சதவீத பொறுப்பு ஏற்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் மக்களவைத் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், மல்லிகா அர்ஜுன கார்கே, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், ஆர்.பி.என் சிங், புனியா, ப.சிதம்பரம், சித்தராமையா, மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version