குஜராத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹர்திக் படேலை ஒருவர் கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி அதன்மூலம் புகழ்பெற்ற ஹர்திக் படேல், சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மக்களவை தேர்தலில் போட்டியிடாத நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஹர்திக் படேல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், மேடையில் திடீரென வந்த நபர் ஒருவர், அவரது வலது கன்னத்தில் பளார் என அறைந்தார். இதையடுத்து மேடைக்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அந்த நபர்மீது தாக்குதல் நிகழ்த்தினர்.
இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஹர்திக் படேலை அவர் அடித்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post