ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக லண்டனில் இருந்து இணைய வழியில் அமெரிக்க வாழ் இந்திய தொழில்நுட்ப வல்லுனர் சையது சுஜா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகார் கூறிய நபரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆஷிஸ் ராய் தலைமையிலான பத்திரிக்கையாளர் சங்கம் பின்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே, இது, காங்கிரசின் ஆதரவில் நடந்த சதி என்று ரவிசங்கர் பிரசாத் புகார் கூறியுள்ளார்.
Discussion about this post