காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வதாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதி, நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார். அதில், அறிவிக்கப்பட்டுள்ளபடி, காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மெஜாரிட்டி வாக்குகள் பெற வேண்டும் என்றும், இந்த வாக்குறுதி காங்கிரசின் தேர்தல் தந்திரமாகவே அமைந்துள்ளதாகவும் பாதுகாப்பு வல்லுநர் கமர் ஆகா தெரிவித்துள்ளார்.
சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டால் காஷ்மீரில் தங்களது பணியை தொடர முடியாது என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளதையும் ஆகா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல், தற்போதைய சூழலில் இதை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று மற்றொரு பாதுகாப்பு வல்லுநர் பி.கே.சேகல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காஷ்மீரின் தெற்கு பகுதியில் இந்த அதிகாரத்தை உமர் அப்துல்லா நீக்கி உத்தரவிட்டதால், அப்பகுதி தீவிரவாதிகளின் கூடாரமாகியுள்ளதை சுட்டிக் காட்டிய சேகல், இந்த சிறப்பு அதிகாரததை நீக்குவதால், நிலைமை மிகவும் மோசமானதாகிவிடும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post