பா.ஜ.க. அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில், நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அறிவித்தது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு திடீரென இந்த அறிவிப்பு வெளியானது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.
இதையொட்டி, சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை வங்கி வாசல்களிலும், ஏ.டி.எம் மையங்களிலும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.
இந்நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன.
Discussion about this post