19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் தொடர்ந்து 3ஆவது முறையாக கோப்பையை வென்ற ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கொங்கு கோப்பை, ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டி, ராஜீவ் காந்தி நினைவு கோப்பை போட்டி என 3 போட்டிகளில் கோப்பையை வென்றனர்.
முதல் பரிசு பெற்ற மாணவிகளுக்கு தனியார் மண்டபத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட உடற்பயிற்சி ஆய்வாளர் வளர்மதி மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாக நடைப்பெற்ற கைப்பந்து போட்டியில், 17 வயதே நிரம்பிய ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளே பங்கேற்று சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Discussion about this post