விழுப்புரம் மாவட்டத்தில் சமூக அக்கறையோடு சிறப்பாக பணியாற்றிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையில் சமுக அக்கறையோடு பணியாற்றுபவர்களை, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் மெச்ச தகுந்த பணிக்காகக்காகவும், பொது மக்களின் சமுக அக்கறையுடனான பணிகளை பாராட்டியும் வெகுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் சமூக அக்கறையோடும் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்தமைக்கும், வழக்குகளை விரைந்து முடித்தமைக்காகவும், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 30 காவலர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். இதையடுத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்டத்தில் சாராயம் , மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மூன்று எண் லாட்டரி விற்பனை விற்பனையாளர்கள் விரைவில் ஒடுக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தார்.
Discussion about this post