பேச்சுவார்த்தைக்கு விதித்த நிபந்தனையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்துள்ளதால் தொடர்ந்து 6வது நாளாக முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், புதுச்சேரி அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
அமைச்சர்களை ஆலோசிக்காமல் அரசு அலுவலகங்களில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 39 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை முதல் இன்றுடன் 6வது நாளாக புதுச்சேரி முதலைச்சர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பேச்சுவார்த்தைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தையின் போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை முதலமைச்சர் நாராயணசாமி விடுத்திருந்தார். இதற்கு கிரண்பேடி மறுத்ததையடுத்து பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இதனால், புதுச்சேரியில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
Discussion about this post