திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி டிக்கெட் பெற போலி ஆவணங்களை சமர்பித்ததாக தெலங்கானா மாநில அரசு கைத்தறி ஜவுளித்துறை மேலாளரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநில அரசு கைத்தறி ஜவுளித்துறை மேலாளராக, அருண்குமார் பாண்டு என்பவர் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ஏழுமையான் கோவிலுக்கு வருகை தந்த அவர், போலி ஆவணங்களை தயார் செய்து விஐபி தரிசன டிக்கெட் பெற முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது ஆவணங்களை சரி பார்த்த தேவஸ்தான ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருண்குமார் பாண்டு போலி ஆவணங்களை பயனபடுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post