அறிவை முதலீடாக்கி வருமானம் ஈட்டுபவர்களுக்கு மத்தியில் ஆபாசத்தை முதலீட்டாக்கி சுகவாழ்வு வாழ்கின்றனர் சொப்பன சுந்தரிகள் சிலர். வாய் கூசும் வார்த்தை, கண் கூசும் உடல் மொழி என எல்லை மீறும் இம்சை அரசிகள், காவல்துறையின் கடிவாளத்திற்குள் சிக்குவார்களா…? பார்க்கலாம்…
சின்சியராக சேலையில் வீடு கட்டி கொண்டிருக்கும் இந்த செலிபிரிட்டியின் பெயர் சந்தான லட்சுமி. டிக்டாக் எனும் ஆபாச வங்கி, இந்தியாவில் இழுத்து மூடப்பட்ட பிறகும், தனது உடலை இன்ஸ்டா, யூ-டியூப் போன்ற தளங்களில் விலை நோக்கு பார்வையோடு முதலீடு செய்து வருமானம் ஈட்டி வாழ்ந்து வருகிறார் இவர்.
இவர் மட்டுமல்ல, ரெளடி பேபி சூர்யா, திருச்சி தென்றல் சாதனா, இலக்கியா என ஒரு டஜன் டிக்டாக் ராணிகள் இப்போது உடல் முதலீட்டில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். யு டியூப், இன்ஸ்டா என எதைத் திறந்தாலும் விரகதாப பாடலுக்கு விவகாரமான உடல் மொழியோடு குத்தாட்டம் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளன இந்த ஆபாச குடோன்கள்.
இணைய மேடையில் ஆபாச நடனத்தை அரங்கேற்றுவது ஒரு புறம் எனில், வியூஸிற்காக இவர்கள் நடத்தும் ”பீப் லைவ்” சகிக்க முடியாத ரகம். பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக முன்பே பேசி வைத்து கொண்டு, மாறி, மாறி கெட்ட வார்த்தையால் ஒருவரை ஒருவர் கேவலப்படுத்தி கொள்கிறார்கள் இவர்கள்.
இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் இந்த ஆபாச சாக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முழுவதில் இருந்தும் தற்போது புகார்கள் குவிய தொடங்கி இருக்கின்றன. கடந்த வாரம் ரெளடி பேபி சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டு அவரது டியூப் சேனல் முடக்கப்பட்ட நிலையில், பிற ஆபாச ராணிகள் பெயரையும் பட்டியலிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதை போல இந்த பாவ மூட்டைகளையும் காவல்துறையினர் கூட்ஸில் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழ தொடங்கி இருக்கிறது. ஊரடங்கால் 5 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரும் ஆன்லைன் வர வேண்டிய சூழலில் இது போன்ற ஆபாச ராணிகள், இணையத்தை ஆக்கிரமிப்பது எதிர்கால சந்ததிகளுக்கு நல்லதல்ல.
Discussion about this post