படக் காட்சியில் தனது செல்போன் நம்பரை பயன்படுத்திய “ஓ மை கடவுளே” திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் அதிபர் புகார் அளித்துள்ளார்.இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான “ஓ மை கடவுளே” படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்தில் நடிகை வாணி போஜன், அசோக் செல்வனிடம் செல்போன் நம்பர் பரிமாறிக் கொள்ளுவது போல் காட்சி இடம் பெற்றது.
நடிகை வாணி போஜன் சொல்லும் செல்போன் நம்பர் தன்னுடையது என்றும், தன்னுடைய செல்போனை நம்பரை பயன்படுத்திய இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன், சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பூபாலன், நடிகை வாணி போஜனின் ரசிகர்கள் தினமும் தனக்கு போன் செய்து தொல்லை செய்வதாகவும், இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post