கொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி விடுதி அருகில் சமுதாயக் கூடம், விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சமுதாய கூடம் காலி மதுபாட்டில் பிரிக்கும் இடமாகவும், அரசு பள்ளி விடுதி அருகே பன்றி கொட்டகை அமைத்துள்ளதால், மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும், ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர் என்பதால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post