புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட நபர், தற்கொலை செய்தும் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
நரங்கியபட்டு பகுதியை சேர்ந்த சிலம்பரசன், கரம்பக்குடி நகர தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ளார். சிலம்பரசன் கடந்த சில தினங்களாக பல்வேறு பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு சிலம்பரசன் தனது செல்போனில், மதுவில் விஷம் கலப்பது முதல், துடிதுடித்து கீழே விழுந்து இறப்பது வரை வீடியோவாக எடுத்துள்ளார். தகலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post