தச்சூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் கமிஷன் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கமிஷன் கொடுக்காத விவசாயிகளின் நெல் மூட்டைகளை வேண்டுமென்றே தேக்கமடைய செய்வதாகவும் புகார்கள் வந்தன. இதனையடுத்து, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு கூடுதலாக நெல் மூட்டைகளை சுத்தம் செய்யும் இயந்திரத்தினை ஒன்றை கூடுதலாக அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
Discussion about this post