எம்.ஜி.ஆர் குறித்து இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அறம் என்ற படத்தை எடுத்த இயக்குனர் கோபி நயினார், ஆனந்த விகடன் வார இதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தலித் சினிமா பற்றிய கேள்விக்கு தேவையில்லாமல் எம்.ஜி.ஆர் குறித்து மேற்கோள் காட்டி பேசியுள்ளார். அதிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாத்திரங்களில் எம்.ஜி.ஆர் நடித்ததாகவும், ஆனால் அதனால் கிடைத்த பணம் முதலாளிகளுக்கு மட்டுமே சென்று சேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
திரையில் கிடைத்த புகழை வாக்குகளாக மாற்றி அரசியலுக்கு வந்து செல்வத்தை திரட்டியதாக அபாண்ட குற்றச்சாட்டையும் கோபி நயினார் தெரிவித்துள்ளார். அந்த பணமும் முதலாளிகள் வசம் சென்றதாகவும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் கதி கவலைக்குரிய நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். வாழ்நாள் முழுவதும் வாரிக் கொடுத்த வள்ளல் என்றும், மறைவுக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்களை மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் கொடுத்துச் சென்ற எம்.ஜி.ஆர் குறித்த கோபி நயினார் கருத்துக்களுக்கு திரைத் துறையிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Discussion about this post