வடகிழக்கு மாநிலங்களின் கைவினைப்பொருள் கைத்தறி மேம்பாட்டு கழகம் சார்பிலான கைவினைப் பொருட்களின் கண்காட்சி, சென்னையில் நேற்று தொடங்கியது.
சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் நடைபெறும் இந்த விற்பனைக் கண்காட்சியில், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சியானது, வரும் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியை, கைத்தறி ஜவுளித்துறை இயக்குனர் கருணாகரன் துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.