மீண்டும் வா நேசா#prayfornesamani .. கிரிக்கெட்டர் ஹர்பஜன் டுவீட்..

உலக அளவில் #prayfornesamani என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் ,கிரிக்கெட்டர் ஹர்பஜனும் #prayfornesamani என குறிப்பிட்டு டுவீட் போட்டுள்ளார்.

பேஸ்புக்கில் இருதினங்களுக்கு முன்பு civil engineers learners என்ற பக்கம் சுத்தியலின் படத்தை பதிவிட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர்? என கேட்டது. அதன் கீழ் இருவர் 2001ல் வெளியான ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் காண்டிராக்டர் நேசமணியை குறிப்பிட்டு காமெடியாக கமெண்ட் செய்திருந்தனர்.இந்நிலையில் மயங்கிய வடிவேலுவை காப்பாற்றும் பொருட்டு ட்விட்டரில் #Prayfornesamani என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவியது.

தற்போது ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் இருக்கிறது.இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்…ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani ’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அளவில் தற்போது #Prayfornesamani என்ற ஹேஸ்டேக் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

Exit mobile version