அரசியலில் தனித்து விடப்பட்ட நிலையில், ஒவ்வொரு முகாமாக அடைக்கலம் தேடும் பன்னீர், தற்போது “துரோகிகள்” என குற்றம்சாட்டியவர்களுடனே கைகோர்த்ததன் மூலம், அரசியலில் தொடர்ந்து நிறம் மாறுவது மீண்டும் உறுதியாகி உள்ளது.
பதவிக்காக ஆசைப்பட்டு மன்னார்குடி குடும்பத்தை துரோகிகள் என்று சொல்லி எதிர்த்து தர்ம யுத்தம் நடத்திய பன்னீர், இன்று மீண்டும் அதே துரோகிகளுடனையே கைகோர்த்திருக்கிறார். இதன் மூலம், தான் ஒரு அரசியல் பச்சோந்தி என்பதை மீண்டும் நிருபணம் செய்திருக்கிறர் பன்னீர்.
சசிகலா, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்திற்கு எதிராகவும், தன்னுடைய பதவியை பறித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி, கடந்த 2017 ஆம் ஆண்டு தர்மயுத்தம் நடத்திய பன்னீர், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். ஆனால், இன்று அதே தினகரனோடு கை கோர்ப்பதற்காக அவரையே தேடி சென்று சந்தித்து தான் “ஒரு சுயநலவாதி” என்பதை நிருபித்திருக்கிறார் பன்னீர்.
சில நாட்களுக்கு முன்னர், ஸ்டாலினின் மருமகன் சபரீசனை கிரிக்கெட் மைதானத்தில் சந்தித்து தனது அரசியல் வாழ்க்கைக்கு வழிகாட்டும் படி கெஞ்சி கூத்தாடிய புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் வெளியான சூழலில் இன்று யாருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினாரோ, அதே டி.டி.வி-யை சந்தித்து “தன் அரசியல் வாழ்க்கைக்கு வழி சொல்லும் படி” கெஞ்சியிருக்கிறார்.
“என்னை அடித்தார்கள், மிரட்டினார்கள், ஊழலின் ஊற்றுக்கண் மன்னார்குடி குடும்பம், புரட்சித்தலைவியின் இறப்புக்கு காரணமே அவர்கள்தான்” என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய பன்னீர், இன்று டிடிவி சார், என்று காலில் விழாத குறையாக கதறிக் கொண்டிருக்கிறார்.
ஒருவேளை, தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதன் காரணமாக என்ன செய்வதென்றே தெரியாமல் ஒவ்வொரு எதிர் முகாமாக சென்று அடைக்கலம் தேடிக் கொண்டிருக்கும் பன்னீரின், பச்சோந்தித்தனத்தை பல்வேறு தரப்பினரும் கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர்.