’7’ புதிய தலைமை நீதிபதிகள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!

கொலிஜியம் என்பது உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதி மன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட அமைப்பு தான் கொலிஜியம். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில்  மூத்த நீதிபதிகள் நான்கு  பேர் இடம்பெறும்  குழுவே கொலிஜியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கொலீஜியமானது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்துவது, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதிகளாக உயர்த்துவது, நீதிபதிகளின் பதவி உயர்வு ஆகியவற்றைப் பரிசீலிக்கும் குழு ஆகும்.

புதுடெல்லி:

இதனை, தொடர்ந்து  கொலிஜியம் ஏழு மாநிலங்களின் உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றதில் பரிந்துரை செய்து உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா,குஜராத், மணிப்பூர், மகாராஷ்டிரா, ஆகிய ஏழு மாநிலங்களின் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியின் பணியிடங்கள் காலியாக உள்ளது குறித்து கொலிஜியம் அமைப்பு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் கூடியது.  இந்த கூட்டதில் கொலிஜியத்தின் உறுப்பினர்களான நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை கூட்டதில்  பங்கேற்றனர்.  மேலும், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஏழு உயர்நீதி மன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க  மத்திய அரசுக்கு கொலிஜியம்  பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் தற்போது மகாராஷ்டிரவின் உயர்நீதி மன்ற நீதிபதியாக உள்ள திராஜ் சிங்தாக்குரை ஆந்திரா உயர்நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து உள்ளது. கர்நாடக உயர்நீதி மன்றதின் நீதிபதியாக பணியாற்றும் அலோக் ஆராதேவை தெலுங்கான உயர்நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து உள்ளது கொலிஜியம். குஜராத்  உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியா உள்ள ஆசிஷ் ஜே தேசாயை கேரள உயர் நீதிமன்றதின் நீதிபதியாக பொறுப்பேற்க பரிந்துரைச் செய்யபட்டு உள்ளது.

ஒடிசா உயர் நீதிமன்றதின் நீதிபதியாக இருக்கும்  சுபாஷிஸ் தலப்பத்ராவுக்கு  உயர்நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்க மத்திய அரசிடம் கொலிஜிய பரிந்துரை செய்து உள்ளது.  உத்திர பிரதேசத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றதின் நீதிபதியாக பணியாற்றும் தேவிந்திர் குமார் உபாத்யாயாவை மகாராஷ்டிரா உயர்நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக  பணியாற்ற பரிந்துரை செய்துள்ளது. உத்திர பிரதேசத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றதின்  நீதிபதியாக இருக்கும் சுனித அகர்வாலை  குஜராத் உயர் நீதிமன்றதின்  தலைமை நீதிபதியாக  நியமிக்க மத்திய அரசிடம் கொலிஜியம் பரிந்துரைத்து உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றதின் நீதிபதியாக பணியாற்றும்  சித்தார்த் முருதுளை மணிப்பூர் உயர் நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசிடம்  பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.  இவை தொடர்பாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பிறகே  குடியரசு தலைவர் அதிகாரபூர்வமான தகவலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த ஆணையயை தொடர்ந்தே ஏழு உயர்நீதி மன்றங்களில் உள்ள புதிய தலைமை நீதிபதிகள்  பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கபட்டது.

 

Exit mobile version