சர்வதேச கடற்கரைத் தூய்மை தினத்தையொட்டி சென்னை மாநில கல்லூரி சார்பில் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
சர்வதேச கடற்கரைத் தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாவது வாரம், முதல் சனிக்கிழமை உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதியில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில், மாநில கல்லூரி சார்பில் மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.