நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணலாயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து செங்கால் நாரை, பூநாரை, சிரவி, உள்ளான் உள்ளிட்ட பறவைகள் வந்து செல்வது வழக்கம். ஆண்டு தோறும் பறவைகள் வரத்து குறித்து கணக்கடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 20 பேர், பேராசிரியர்கள் கொண்ட குழுவினர், வனத்துறையினரோடு இணைந்து 15 குழுக்களாக பிரிந்து 2 நாட்களுக்கு பறவைகள் கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர். பைனாக்குளர் மற்றும் நேரடிப்பார்வை மூலம் இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Discussion about this post