கோவையில் பழங்குடியின கிராமங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அஞ்சி, மரங்களின் மீது ஏறிய இளைஞர்கள், கீழே வர மறுத்ததால் சுகாதாரப் பணியாளர்கள் அவதி அடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் அவலம் ஒருபக்கம் என்றால், மலைக்கிராமங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வராதவர்களால் சுகாதாரப் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொண்டாமுத்தூரை அருகே, முள்ளங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலைகிராமங்களுக்கு 500 தடுப்பூசிகளுடன் சுகாதாரத்துறை மருத்துவர்கள் சென்றனர். இதனையறிந்த அப்பகுதி இளைஞர்கள் அங்குள்ள மரங்களின் மீது ஏறி நின்று கீழே வர மறுத்தனர்.
மலைக்கிராமங்களில் தடுப்பூசி விழிப்புணர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த செய்தியை வீடியோ வடிவில் பார்க்க……
⤵⤵↕↕⬇⬇⏬⏬????