தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், அணையின் கரையோர பகுதிகளான உத்தமபாளையம், தேனி, வீரபாண்டி, குன்னூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post