இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஏழு பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார். மழலையர் வகுப்பினையும் முதலமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் முதற்கட்டமாக இந்த வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதன் மூலம் 52 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.