தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் தின விருதுகள்- முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், அன்வர் பாட்ஷாவுக்கு திருவள்ளுவர் விருதும், பொன்னையனுக்கு தந்தை பெரியார் விருதும் 
மருத்துவர் ராமகுருவுக்கு அண்ணல் அம்பேத்கர் விருதும் வழங்கப்பட்டது.

பேராசிரியர் மு.அய்யாக்கண்ணுவுக்கு பேரறிஞர் அண்ணா விருதும், பழ.நெடுமாறனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருதும், பாவரசு மா.பாரதி சுகுமாரனுக்கு மகாகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டது. கவிஞர் தியாகுவிற்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், முனைவர் கு.கணேசனுக்கு தமிழ் தென்றல் திரு.வி.க. விருதும், சூலூர் கலைபித்தனுக்கு முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருதும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் காசோலையும், ஒரு சவரன் தங்க பதக்கமும் வழங்கப்பட்டது. இதேபோல், வயது முதிர்ந்த 92 பேருக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகையாக 2 ஆயிரத்து 500 ரூபாயும், மருத்துவப்படியாக 500 ரூபாயும் வழங்குவதற்கான அரசாணையும் வழங்கப்பட்டது.

Exit mobile version