விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
ஏழை விவசாயிகளுக்கு வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக கூட்டணி சார்பாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. இதையடுத்து ஏழை விவசாயிகளுக்கு மட்டும் வழங்குவதாக திட்டமிட்டிருந்ததை விரிவுப்படுத்தி, அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அனைத்து விவசாயிகளின் சார்பாக நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர், சிறு குறு விவசாயிகளின் ஓய்வூதிய திட்டத்திற்கும் மற்றும் சிறு வணிகர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டங்களை அமல்படுத்துவதில், தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.