இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள மாம்பாக்கத்தில் செயிண்ட் கோபைன் பன்னாட்டு நிறுவனத்தில் மூன்றாவது மிதவை கண்ணாடி ஆலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டில் மூன்றாவது மிதவை ஆலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டிள்ளதாக கூறிய முதலமைச்சர், தொழிற்சாலைகள் தொடங்க சாதகமான மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார்.
செயின்ட் கோபைன் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.சி. சம்பத், பலதரப்பட்ட உற்பத்தித் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். சிறந்த திறன்வாய்ந்த மனித வளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் குறிப்பிட்டார்.