பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் இணைந்துள்ளனர் – முதல்வர் பழனிசாமி

விவசாயிகள் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று நபார்டு வங்கியின் கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் நிதி கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நபார்டு வங்கியின் 2019-20 நிதியாண்டின் கடனுதவி மதிப்பீடு அறிக்கையை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உணவு தானிய உற்பத்தியில் 100 கோடி மெட்ரிக் டன் அளவை ஐந்து முறை தமிழ்நாடு எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பயிர் காப்பீட்டு திட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பொருட்கள் தயாரிக்கும் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய இழப்பை சரிசெய்ய 12 திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

10 மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் நபார்டு வங்கியின் கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version