தொப்பூர் அருகே உள்ள வள்ளலார் இல்ல கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஆதரவற்ற சிறுவர்-சிறுமியரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து கூறினார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தொப்பூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள வள்ளலார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு முதலமைச்சர் சென்றார்.
தங்கள் காப்பகத்துக்கு முதலமைச்சர் வருவதை அறிந்த சிறுவர்கள் உற்சாக மிகுதியால் துள்ளி குதித்தும், கைகளை அசைத்தும், ஆரவாரம் செய்தும் முதலமைச்சரை வரவேற்றனர். குழந்தைகளின் உற்சாகத்தை கண்ட முதலமைச்சரும், அவர்களிடம் சென்று, கனிவுடன் நலம் விசாரித்து மகிழ்ந்தார். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய முதலமைச்சர், அனைவரும் நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.