மேட்டூர் அணையை தூர்வாரி வரலாற்றில் இடம்பிடித்த முதல்வர்

காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையே மேட்டூர் அணை ஆகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

மேட்டூர் அணை 1925ல் கட்டத் தொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட போது, அது ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. இன்றும் மேட்டூர் அணையே தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக உள்ளது.

மேட்டூர் அணையின் அதிகபட்ச உயரம் 214 அடிகள் ஆகும், அணையின் அதிகபட்ச அகலம் 171 அடிகள் ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடிகள் ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணாராஜ சாகர் அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களின் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 12 மாவட்டங்களின் மக்கள் மேட்டூர் அணையின் நீரையே குடிநீர் ஆதாரங்களுக்காக சார்ந்து உள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணையானது கட்டப்பட்டதில் இருந்து தூர்வாரப்படாமல் இருந்ததால், கடந்த 2016ல் இங்கு 20% அளவுக்கு சகதி படிந்திருந்ததாகக் கணக்கிடப்பட்டது. இதனால் அணை கட்டப்பட்ட 83 ஆண்டுகளில் முதன்முறையாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் இங்கு தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து வரலாற்றில் தடம் பதித்தார்.

2018 ஜூலை 23 ஆம் தேதி 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது முழுக் கொள்ளளவான 120 அடிகளை மேட்டூர் அணை எட்டியது. இதனால் கடந்த 2018 ஜூலையில் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே திறந்து வைத்தார்.

பின்னர் அதே 2018 ஆம் ஆண்டின் ஆகஸ்டு 13 ஆம் தேதி மேட்டூர் அணை மீண்டும் இரண்டாம் முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது. மீண்டும் ஆகஸ்டு 21 ஆம் தேதி மூன்றாம் முறையாகவும் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது.

அதன் பின்னர் கர்நாடக கனமழை காரணமாக தற்போதும் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. அணையில் போதிய நீர்வரத்து உள்ள நிலையில், மக்களின் கோரிக்கைகளை ஏற்று மேட்டூர் அணை விவசாயம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக திறந்துவிடப்படுகிறது.

Exit mobile version