ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு, முதல்வர் வாழ்த்து

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தியாகத்தின் மறுவுருவமான இயசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த புனித நாளில், உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும் சகோதரத்துவம் தழைக்கட்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். தமிழக மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும் என்றும், அதற்காக இயேசுபிரான் உயிர்த்தெழுந்து ஈஸ்டர் நாளில் உறுதியேற்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version