தமிழ்நாடு காவல்துறை பயன்பாட்டிற்காக, 2 ஆயிரத்து 271 வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களை தடுக்கவும், ரோந்து பணிகளுக்காக தமிழ்நாடு காவல்துறைக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக, 95 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில், அயிரத்து 506 இருச்சக்கர வாகனங்கள், 31 ஸ்கார்ப்பியோ வாகனங்கள், 510 பொலீரோ ஜீப்புகள், 50 வேன்கள், 100 சிற்றுந்துகள், 20 பேருந்துகள், 54 லாரிகள் என, மொத்தம் 2 ஆயிரத்து 271 வாகனங்களை காவல்துறை பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார். அதன் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், 41 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், வெல்லமண்டி நடராஜன், சரோஜா மற்றும் அரசு உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.