விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தை தொடங்குவதால், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வருகிற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டியில் தனது பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். முதல்நாளான இன்று விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி, வி.சாத்தனூர், டி.புதுப்பாளையம் ஆகிய இடங்களுக்கு சென்று அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
அதைத்தொடர்ந்து நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாரயணை ஆதரித்து, 13, 14, 17 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மீண்டும் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.