டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு மனிதராய் தோன்றிய கிறிஸ்துமஸ் நாளில், அதை கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அனைவரிடத்திலும் அன்பு, பகைவரிடத்திலும் பரிவு, பகிர்ந்து வாழும் சகோதரத்துவம் போன்ற உன்னதமான வாழ்க்கை நெறிமுறைகளை வழங்கிய இயேசு பெருமான் காட்டிய பாதையில் உலகம் தழைத்திட நம்மால் இயன்றதெல்லாம் செய்வோம் எனவும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.